கணவர் மீது வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி, 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளார்.
நடிகையும் முன்னாள் மிஸ் இந்தியாவுமான செலினா ஜெட்லி ஏராளமான படங்களில் நடித்துப் பிரபலமடைந்தார்.
இவர் 2010-ம் ஆண்டு பீட்டர் ஹாக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், பிரச்னைகள் காரணமாகத் தனது கணவர் பீட்டர் ஹாக் மீது குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்த செலினா, 50 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.
தனது கணவரால் கடுமையான உணர்ச்சி, உடல்நல பாதிப்புகளுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















