டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பிரதமர் அலுவலகம் முக்கிய கூட்டத்தை நடத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமாகப் பதிவான நிலையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
டெல்லியில் இன்னும் 37 சதவீதம் அளவிற்கு BS3 வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகச் செய்தி வெளியான நிலையில், அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்துவது குறித்து மாநில அரசு அதிகாரிகளுக் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மின்சார வாகனங்களை ஊக்குவித்துக் காற்று மாசை தடுப்பது குறித்தும் ஆலோசிப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் அலுவலகம் காற்று மாசு விவகாரத்தில் கவனம் செலுத்தியுள்ளது.
















