100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜின் உறவினர் அரசுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி சந்தானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட நிலத்தின் பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருவாய்த்துறையினருக்கு ஆணையிட்டார்.
இதனிடையே நிலத்தை உடனடியாக மீட்டு, அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்ஆணையிட்டார்.
















