இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், வலுவடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகும் எனவும், புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் பரிந்துரைத்த ‘தித்வா’ என்ற பெயர் இந்த புயலுக்கு பெயரிடப்பட உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
















