இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் “டிட்வா” புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 700 கிலோ மீட்டர் தூரத்தில் தெற்கு, தென்கிழக்கு பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழகம், புதுச்சேரியை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி, புயல் நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயலுக்கு “டிட்வா” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
















