போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்கள் தேர்தல்களில் வாக்களிக்க முடியுமா என எஸ்ஐஆர் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், கேரளா மற்றும் மேற்குவங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, படிவம் 6ல் வாக்காளர்களால் அளிக்கப்படும் விவரங்களை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், படிவம் 6ல் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து விவரங்களையும் சரிபார்க்க தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது என கூறினர்.
ஆதார் என்பது அடையாள ஆவணம் மட்டுமே என கூறிய நீதிபதிகள், போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர்களை தேர்தல்களில் வாக்காளிக்க அனுமதிப்பீர்களா? எனவும் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.
















