23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் வரும் அவர், டிசம்பர் 4, 5ம் தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்,
இந்தியா வரும் விளாடிமிர் புதினுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருந்து அளிக்கிறார். பின்னர் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசுகிறார்.
அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. குறிப்பாக பாதுகாப்பு துறை சார்ந்த 5ம் தலைமுறை விமானம், எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















