ராஜஸ்தானில் GOLD MAN என்று அழைக்கப்படும் வியாபாரிக்கு ரோஹித் கோதாரா கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சித்தூர்காரைச் சேர்ந்தவர் பழ வியாபாரி கன்ஹையா லால் கட்டிக். ஒரு காலத்தில் தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று வந்த கட்டிக்கின் வாழ்க்கை, ஆப்பிள் வியாபாரம் மூலம் ஜொலிக்க ஆரம்பித்தது.
பணம் குவிய குவிய அவருக்குத் தங்கத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் எப்போதும் மூன்றரை கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டே அவர் உலா வருவது வழக்கம்.
இந்நிலையில் ரோஹித் கோதாரா கும்பலை சேர்ந்தவர்கள் கட்டிக்கை தொடர்பு கொண்டு 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பணத்தை தரவில்லை எனில் தங்கம் அணியும் நிலையில் இருக்க மாட்டீர்கள் என அவர்கள் மிரட்டியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாகக் கட்டிக் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரோஹித் கோதாரா மீது இந்தியாவின் பல்வேறு காவல் நிலையங்களில் 32-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர் வணிகர்களிடம் இருந்து மிரட்டிப் பணம் பறிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அத்துடன் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கிலும் குற்றவாளியாக உள்ளார்.
















