ஸ்மார்ட்ஃபோன்களை XR தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெட்செட்டாக மாற்றும் முயற்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவன பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் “XR தொழில்நுட்பம்” வளர்ச்சிகுறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மெட்டா, சாம்சங், குவால்கம் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி பேராசிரியர் மணிவண்ணன், வருங்காலங்களில் கல்வி, தொழில்துறை, விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறை சார்ந்த பயிற்சிகளைப் பெறுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய XR தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இத்தொழில்நுட்ப கருவிமூலம் திரையரங்கில் காண்பது போலவே நம்மால் படம் பார்க்க முடியும் எனவும் இதனால் வருங்காலங்களில் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது குறையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
















