ராமேஸ்வரம் ஓலைகுடா பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன.
ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளான பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரக் காலமாகப் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஓலைக்குடா பகுதியில் கடல் சீற்றம் மற்றும் மண் அரிப்பு காரணமாகச் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துச் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















