டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளுக்கு இடையே நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்தும், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, மயிலாடுதுறை, நாகை, கடலூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
















