அடுத்த இரு நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிதுள்ளார்.
இத்தகைய தருணத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். எத்தகைய அசம்பாவிதமும் நேராமல் இருக்க போர்க்கால அடிப்படையில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று அறிவாலய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரம், தமிழக மக்களின் துயர் துடைத்துத் தோள்கொடுக்கும் விதமாக நமது பாஜக
சொந்தங்கள் களத்தில் முன்னின்று மக்களைப் பாதிப்பிலிருந்து காக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறேன் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















