கும்பகோணம் அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் டிட்வா புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி பகுதியில் முத்துவேல் என்பவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த நிலையில், கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது.
வீட்டில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இடுபாடிகளில் சிக்கியிருந்த 4 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். 4 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், முத்துவேலின் இளையமகள் ரேணுகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















