கோவையில் உறவினருடன் தகாத உறவில் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு அதனை வாட்ஸ் அப்-பில் பதிவேற்றம் செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை தருவை பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோவையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்து ஸ்ரீ பிரியா பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது, பாலமுருகனின் உறவினர் இசக்கி ராஜாவுக்கும், ஸ்ரீ பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இருக்கும் புகைப்படத்தை இசக்கி ராஜா தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில் வைத்ததை கண்டு ஆத்திரமடைந்த பாலமுருகன், ஸ்ரீ பிரியா தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.
பின்னர், சடலத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது வாட்ஸ் அப்-பில் ஸ்டேடஸ் வைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பாலமுருகனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















