டிட்வா புயல் வலுவிழந்ததால் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.
வங்க கடலில் உருவான டிட்வா புயல் எதிரொலியாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது. இதனால் இருமாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், டிட்வா புயலானது வலுவிழந்ததால், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக டிட்வா புயல் மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
















