மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.
டிட்வா புயல் எதிரொலியாக மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. சீனிவாசபுரம், கீழப்பட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அவதியடைந்த குடியிருப்பு வாசிகள், தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவரும் சூழலில், அதிகபட்சமாக செம்பனார்கோவிலில் 17 சென்டிமீட்டர் மழை பதிவானது.
புது தெரு, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளாததே பாதிப்புக்கு காரணம் என குற்றஞ்சாட்டும் மக்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் அப்பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும், வடிகால்வாய்கள் முறையாக தூர்வாரததே இதற்கு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
















