இலங்கையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.
இலங்கையின் பல்வேறு பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படைகளும், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், இலங்கையின் வடமேற்கு மாகாணமான வென்னப்புவ பகுதியில், விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 என்ற ஹெலிகாப்டர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
















