இலங்கையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் டிசம்பர் 8 ஆம் தேதி வரை திறக்கப்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிட்வா புயலால் இலங்கையில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வெள்ள பாதிப்புகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் மழையால் உருக்குலைந்த இலங்கையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தொடர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படாது என அந்நாட்டு உயர்கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
















