அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் பேசிய அவர், அத்திக்கடவு திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என கூறிய செங்கோட்டையன், யார் படத்துடன் தவெகவில் இணைந்தார் என கேள்வி எழுப்பினார்.,
செங்கோட்டையனுக்கு அடையாளமும், பதவியும் கொடுத்தது அதிமுக தான் என்றும்,
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தேவர் பூஜையின்போது செங்கோட்டையன் பேசியதாகவும் கூறினார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக அவர் செயல்பட்டார் என்றும், கட்சி தலைமைக்கே கெடு விதித்தவரை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும்? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
திரைப்படம் பார்க்க 3 மணி நேரம் செலவழிக்கும் ஸ்டாலினுக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என்றும், திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்றும் அவர் சாடினார்.
“தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும், பின்னர் எப்படி சட்டம் – ஒழுங்கை எப்படி காப்பாற்றுவது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் தங்க விலை நிலவரத்தை போன்று கொலை நிலவரத்தை பார்க்க வேண்டியுள்ளதாகவும் இபிஎஸ் கூறினார்.
இதனிடையே அதிமுக தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இறந்தவர் கொண்டையம்பாளையம் பகுதியை சோ்ந்த அதிமுக தொண்டர் அா்ஜூனன் என்பது தெரியவந்திருக்கிறது
















