தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், தனது இரு மகன்களுடன் தருமபுரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
செங்கல்மேடு அருகே சென்றபோது எதிரே வந்துகொண்டிருந்த கனரக வாகனம், அருண்குமாரின் வாகனம் மீது மோதியது.
இதில், அருண்குமார் மற்றும் அவரது மூத்த மகன் திருஞானம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு மகன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
















