ஆந்திராவில் கரை ஒதுங்கிய படகில் இருந்த 13 வங்கதேச மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் எட்சர்லாவில் சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்று கரை ஒதுங்கியதை உள்ளூர் மீனவர்கள் கண்டனர்.
விசாரணையில் படகு பழுதடைந்ததால் சுமார் 20 நாட்களுக்கு மேலாக 13 வங்கதேச மீனவர்கள் கடலில் தத்தளித்தது தெரியவந்தது.
உணவு மற்றும் தண்ணீர் இன்றி சோர்வுடன் இருந்த மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் உணவளித்தனர்.
தகவல் அறிந்து வந்த மரைன் போலீசார் சர்வதேச கடல் எல்லைகளை அத்துமீறி வந்த குற்றச்சாட்டில் 13 பேரையும் சிறைபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















