திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் ஏற்றப்பட உள்ள மகா தீபத்திற்கான திரிகளுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் கடந்த 24ம தேதி முதல் கார்த்திகை தீப விழா நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.
இந்தநிலையில் இதற்கான காடா துணிகளை கட்டளைதாரர்கள், அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
முன்னதாகக் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் காடா துணியை வைத்துச் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
















