ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை பெய்து வரும் நிலையில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
அந்த வகையில் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் கனமழை பெய்த நிலையிலும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமலைக்கு வரும் பக்தர்கள் கடும் குளிர்காரணமாக அவதி அடைந்த நிலையில் தங்குவதற்கு அறை கிடைக்காமல் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் சமுதாயக்கூடங்களில் தங்கினர்.
இதற்கிடையே மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பக்தர்கள் கவனத்துடன் இருக்குமாறும் தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















