நாடு முழுவதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ், அமலாக்கத்துறை, சிபிஐ என்ற பெயரில் மொபைல் போன் வீடியோ அழைப்பு மூலம் சிலர் பொதுமக்களை மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர்.
ஹரியானாவைச் சேர்ந்த வயதான தம்பதி அளித்த புகாரின்படி, டிஜிட்டல் கைது தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜெய்மால்யாபாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வுத் தீர்ப்பு வழங்கியது.
இதில் நாடு முழுதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்படுகிறது எனவும் இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
















