திருப்பரங்குன்றம் கோயில் மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது என மனுதாரர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதற்கான தீர்ப்பு நகலை, கோயிலில் வைத்து மனுதாரர் ராம ரவிக்குமார் வணங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை நிச்சயம் தீபம் ஏற்றப்படும் எனவும் இதற்குக் காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
















