சிதம்பரத்தில் அண்ணன் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிம்பரம் அருகே காட்டுக்கூடலூர் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்- தமிழரசி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாகக் கோபாலகிருஷ்ணன் தமிழரசியை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.
இந்தநிலையில், தமிழரசி அளித்த பாலியல் புகாரில், கோபாலகிருஷ்ணன் சகோதரர்களான பாலகிருஷ்ணன், முருகானந்தன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த பாலகிருஷ்ணன், தமிழரசியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
தங்களது வீட்டை அபகரிக்கும் நோக்கும் தன் மீது பொய் புகார் அளித்ததால், தமிழரசியை கொலை செய்ததாகப் பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
















