திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற விடாமல் திமுக அரசு தடுக்க நினைப்பதாக பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை பெருங்கோட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற விடாமல் திமுக அரசு தடுக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி, நீதியை நிலைநாட்ட போராடும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை என்றும், மேல்முறையீடு சென்று விட்டாலே அதை வைத்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள் என்றும் அவர் சாடினார்.
















