சென்னை வொண்டர்லா பொழுது போக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் பாதியில் நின்றதால் மக்கள் பரிதவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சென்னை வொண்டர்லா பொழுது போக்கு பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை திறந்து வைத்தார். ஆனால் திறந்து வைத்த சிலமணி நேரங்களிலேயே பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ரோலர் கோஸ்டர் பாதியில் நின்றது.
இதனால் அதில் பயணித்த மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்று அவர்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.
















