தமிழக உழவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019-இல் மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை தமிழக விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000 வீதம், சுமார் ரூ.12,764 கோடி வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழக கிராமப்புறங்களில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் இலவசக் குடிநீர் இணைப்புகள் வழங்கி மக்களின் தாகத்தைத் தீர்த்து பெரும் சாதனை புரிந்துள்ளது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.
உலகுக்கே உணவளிக்கும் விவசாயம் தான் ஒரு தேசத்தின் உண்மையான ஆன்மா என்பதை உணர்ந்து, விவசாயிகளுக்கு கௌரவ நிதி அளிப்பதில் தொடங்கி, அவர்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது வரை விவசாயிகளின் நல்வாழ்வுக்கானதமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வீறுநடையிட வைக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் மிகையாகாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















