தீபத் திருநாள் நிறைவடைந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து சொந்த ஊர் கிளம்பிய பக்தர்களால் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நேற்று நடைபெற்றது.
இதில் வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் எனச் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகத் திரளானோர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து வேலூர் செல்லும் விரைவு ரயில் வந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.
பக்தர்களின் வசதிக்காகத் தென்னக ரயில்வே சுமார் 16 சிறப்பு ரயில்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
















