ஹாங்காங்கின் மிகப்பெரிய தீவான லாண்டா தீவை 21 மணி நேரத்தில் நீந்திச் சென்று இருவர் சாதனை படைத்துள்ளனர்.
லாண்டாவ் தீவில் என்கோப் பிங் மலை உச்சியில் பிரம்மாண்டமான வெண்கல புத்தர் சிலை மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.
ஹாங்காங்கின் மிகப் பெரிய தீவான லாண்டா தீவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த தீவை சுற்றி வரும் மாரத்தான் நிச்சல் போட்டி நடைபெற்றது.
சவாலான கடல் பரப்பு, அதிக அலைகள், மாறி வரும் நீரோட்டங்கள் போன்ற காரணங்களால் போட்டியில் கலந்து கொண்டன பலரும் தசைப் பிடிப்பு, மயக்கம் உள்ளிட்ட காரணங்களால் பாதியில் வெளியேறினர்.
பிரிட்டனை சேர்ந்த சைமன் ஹாலிடே தொடர்ந்து 20 மணி நேரம் 56 நிமிடங்களில் நீந்தி முதலிடம் பிடித்தார்.
இதேபோல் எடி ஹூ என்ற அமெரிக்காவை சேர்ந்த பெண் 21 மணி நேரம் 28 நிமிடங்கள் நீச்சலடித்து, லாண்டா தீவைச் சுற்றி நீந்திய முதல் பெண் என்ற சாதனையை படைத்தார்.
தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு மேலாகத் தண்ணீரில் இருந்தும், இந்த வீரர்கள் தங்கள் இலக்கை அடைந்தது நீச்சல் போட்டியில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
















