தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்தற்கு பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திருப்பரங்குன்றம் கோயில் மலையில் பக்தர்கள் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவை ஹிந்து விரோத திமுக அரசு மீண்டும் ஒருமுறை வேண்டுமென்றே மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹச்.ராஜா, மறறும் நிர்வாகிகளை கைது செய்த தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவை அமைதியாகப் பின்பற்றவும், பாரம்பரியத்தை மதிக்கவும் முயற்சி செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.
144வது பிரிவு ஏற்கனவே மாண்புமிகு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியின் தொடர்ச்சியான தடை நீதித்துறை அதிகாரத்தை அப்பட்டமாக அவமதிப்பதாகும் எனறும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், ஹிந்து விரோத திமுக அரசு மேலும் மீறாமல் நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















