தஞ்சையில் திமுக முன்னாள் எம்பி வீட்டில் 87 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சையில் உள்ள திமுக முன்னாள் எம்பியும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் கடந்த மாதம் 28ம் தேதி 87 சவரன் நகைகள் திருடுபோனது. இதையடுத்து அவர் அளித்த புகாரின்படி, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக தருமபுரியை சேர்ந்த சாதிக் பாஷா மற்றும் அவரது உறவினர்கள் மொய்தீன், ஆயிஷா பர்வீன் , பாத்திமா ரசூல் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 87 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
















