காஞ்சிமடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட தங்கத்தேர் - காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிமடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட தங்கத்தேர் – காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 09:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிமடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேரை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒப்படைத்தார்.

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத்தேர் செய்யும் பணியானது 12 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சங்கர மடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் தங்கத்தேர் செய்யப்பட்டது.

இந்நிலையில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தில் தங்கத்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தங்கத் தேரினை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரசித்தி பெற்றது என தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள 3 முக்கிய கோயில்களான காமாட்சியம்மன் கோயிலுக்கு ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளின் சங்கல்பத்துடன் தங்கத்தேரும், வரதராஜ பெருமாளுக்கு மரத்தேரும் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக கூறினார்.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் சங்கல்பம் செய்யப்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மக்களின் பங்களிப்புடன் தங்கத்தேர் செய்யப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

Tags: Kanchi MathKanchipuram Ekambaranathar Templeminister saker babuVijayendra Saraswathi SwamigalKanchi Ekambaranathar Temple Golden Chariot
Share
Tweet
SendShare
Previous Post

தஞ்சையில் ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் கொள்ளை போன நகைகள் மீட்பு – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது!

Next Post

தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கக்கூடாது – நயினார் நாகேந்திரன்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies