திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தொடர்ந்து தடை விதித்து வரும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அளித்தும், தீபம் ஏற்றுவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். தமிழக அரசின் செயலைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது.
அந்த வகையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகளை மற்றும் தொண்டர்களை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
கைதானவர்களை காவல் வாகனத்தில் ஏற்றும்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது இதேபோல் ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
















