இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு : பென்டகன் முன்னாள் அதிகாரி விமர்சனம் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு : பென்டகன் முன்னாள் அதிகாரி விமர்சனம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தேசிய நலனுக்கே முன்னுரிமை என்பதில் இந்தியா உறுதியாக இருக்கும் நிலையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் மறைமுகமாக உக்ரைன் போருக்கு உதவுவதாக காரணம் காட்டி இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார்.

இந்தச் சுழலில், 23வது இந்திய ரஷ்ய உச்சி மாநாட்டுக்காக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின்,
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத முதன்மை சக்தியாக உள்ளது என்று பாராட்டியுள்ளார்.

மேலும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியாவுக்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் நிலையாக, தடையில்லாமல் ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம்,தொழில்நுட்பம், தகவல்தொடர்பு மற்றும் பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அவசியமான மற்றும் திறமையான போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்குவதில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் மோடியும் அதிபர் புதினும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இருநாட்டு வர்த்தகத்தைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கான செயல்திட்டத்தையும் வகுத்துள்ளனர்.

இந்நிலையில், பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், அதிபர் ட்ரம்பின் திறமையின்மையால் தான் ரஷ்ய அதிபர், இந்தியாவுடன் அதிக நெருக்கத்தைக் காட்டுவதாக 65 சதவீத அமெரிக்கர்கள் கருதுவதாக கூறியுள்ளார்.

விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகும் இந்தியா, அதற்கேற்ப எரிசக்தி தேவைகளையும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மைக்கேல் ரூபின், ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் உள்ளிட்ட கனிமங்கள் இறக்குமதி செய்யும் அமெரிக்கா, இந்தியாவை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இந்திய உறவுகளை அதிபர் ட்ரம்ப் தலைகீழாக மாற்றிவிட்டதாகவும், பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தார் ஆகியவற்றின் தாக்கத்தால், தவறான வெளியுறவுக் கொள்கைகளையே ட்ரம்ப் எடுத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே அடுத்த ஆண்டுக்கான புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை, அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை ‘முக்கிய கூட்டணி நாடாக அறிவித்துள்ள அமெரிக்கா, வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு நிலைத்தன்மை, தொழில் நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் முக்கிய சக்தியாக விளங்கும் இந்தியாவுடன் நீண்டகால நட்புறவை மேம்படுத்துவது அமெரிக்காவின் பாதுகாப்பு குறிக்கோளில் முக்கிய அம்சமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக ரிக் ஸ்விட்சர் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இந்தியாவுக்கு வர முடிவு செய்துள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய அதிபர் புதினின் இரண்டு நாள் இந்தியப் பயணம் உலக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புவி சார் அரசியலில் மையப் புள்ளியாக இருக்கும் இந்தியா உலக ஒழுங்கையே இதன் மூலம் மாற்றியுள்ளது .

Tags: washingtonkamala harrisDonald TrumpRepublican candidateMarylandFormer US Pentagon official Michael Rubinnobel russiaindia russia realtionIndiarussiaamerica
ShareTweetSendShare
Previous Post

கும்பகோணம் அருகே சக மாணவர்கள் தாக்கியதில் மாணவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Next Post

வால்பாறையில் சிறுவனை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies