அசாமின் வரலாற்று சிறப்புமிக்க நீர்நிலைகளில் ஒன்றான உர்பாத் பீல் ஏரியில், தாமரையும், அல்லி மலர்களும் பூத்துக் குலுங்குவதால், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்கவர் காட்சியாக மாறியுள்ளது.
உர்பாத் பீல் ஏரி, கோல்பாரா நகரத்திலிருந்து சுமார் 10 கிமீ தெற்கில் ஜிஞ்சிராம் நதிக்கு அருகே அமைந்துள்ளது.
தாமரை, அல்லி மற்றும் நீர்வாழ் தாவரங்கள் நிறைந்த இந்த ஏரி, சிறு படகுகளில் சுற்றி வரும் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது. அல்லிகள் மற்றும் தாமரைகள் அதிக அளவில் மலர்ந்துள்ளதால், இந்த ஏரிக்கு Pink Paradise என்ற பெயரும் உள்ளது.
சுமார் 620 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, மீன்பிடி தொழிலை நம்பியுள்ள அப்பகுதி மக்களுக்கு உயிர்நாடியாகச் திகழ்கிறது.
பருவமழைக் காலங்களில் ஏரியின் பரப்பு 620 ஹெக்டேராகவும், குளிர்காலத்தில் 515 ஹெக்டேராகவும் சுருங்குகிறது.
இந்நிலையில், ஏரியின் மேற்பரப்பு முழுவதும் தாமரை மற்றும் இளஞ்சிவப்பு அல்லிப் பூக்கள் படர்ந்துள்ள இந்த மாயாஜாலக் காட்சியைக் காண, தினமும் தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
















