திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஒன்றாம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி போலீசார் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து மனுதாரரான ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 5ம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதனையேற்று வழக்கு விசாரணை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
















