திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க செய்வதற்காக INDI கூட்டணி கட்சிகளிடம் திமுக கையெழுத்து பெறுவது மிகக் கேவலமானது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்,
கோவை விமான நிலையத்தல் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதன், இந்திய இறையாண்மைக்கு எதிராக தீர்ப்பு வழங்கவில்லை என தெரிவித்தார்.
நீதிபதியை பதவிநீக்கம் செய்ய திமுக கூட்டணி MP-க்கள் நாடாளுமன்றத்தில் கையெழுத்து வாங்கி வருவதாகவும், . அரசுக்கு ஒரு தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக நீதிபதியை பதவிநீக்கம் செய்வோம் என்றால், அது மற்ற நீதிபதிகளை மிரட்டுவதாக தான் அர்த்தம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும்,
வலிமையான கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
S.I.R பணி மூலம் 80 லட்சம் முதல் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
















