திருப்பரங்குன்றத்தின் மேல் இருப்பது தர்காவே இல்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மனு அளித்தார். பின்னர் இதுதாடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்து முன்னணியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் கோயில் நிலங்களில், கல்லூரி, பள்ளிகள் கட்டுவது தொடர்பான மசோதா கொண்டு வரப்பட்டு, அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார்.
கோயிலில் ஊழல் நடப்பதற்கு இந்த தீர்மானம் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு 125 கோவில்களை இடித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
















