தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சென்னை வந்தடைந்தார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு நடத்தி வருகிறது. டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தமிழகத்தில் 4 நாட்கள் பயணமாக இரவு சென்னை வந்தடைந்தார்.
திருவான்மியூர் ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் அமைப்பு ரீதியான கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
மேலும், மாலை 3 மணிக்கு மேல் நடைபெறும் நிகழ்ச்சியில் மோகன் பாகவத்தை சந்தித்து முக்கிய பிரபலங்கள் கலந்துரையாடவுள்ளனர்.
















