சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திமுக கவுன்சிலர் ஆக்கிரமித்த அரசு புறம்போக்கு நிலத்தை பாஜகவினரின் முயற்சியால் அதிகாரிகள் மீட்டனர்.
மேச்சேரி அடுத்த மேலாண்டியூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை பேரூராட்சி 7 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் விமல் ஆக்கிரமித்ததாகப் புகார் எழுந்தது.
இந்த நிலத்தை மீட்கக் கோரி பாஜக சார்பில் மேச்சேரி பேருந்து நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வருவாய் துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி நிலத்தை மீட்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அப்பகுதி மக்கள் பாஜகவினருக்கு நன்றி தெரிவித்தனர்.
















