மேற்கு வங்க தேர்தலோடு தொடர்புபடுத்தி வந்தே மாதரம் பாடலின் மகிமையை எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிடுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு நிறைவு குறித்து மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.
இரு அவைகளிலும் வந்தே மாதரம் குறித்த விவாதம் எதிர்கால சந்ததியினருக்கு அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், மகிமையையும் புரிந்துகொள்ள உதவும் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்க தேர்தலோடு தொடர்புபடுத்தி வந்தே மாதரம் பாடலின் மகிமையை எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும் வந்தே மாதரம் என முழங்கியவர்களை இந்திரா சிறையில் அடைத்தார் என கூறிய அவர், தன் இன்னுயிரை தியாகம் செய்யும் போது எல்லையில் ராணுவத்தினர் எழுப்பும் ஒரே முழக்கம் வந்தே மாதரம் எனத் தெரிவித்தார்.
















