வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது சிபிஐ கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அனில் அம்பானி, 17 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இரண்டு வழக்கு களை சிபிஐ பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தற்போது அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
















