ராஜஸ்தானில் ஆம்னி பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிகார் மாவட்டத்தில் ஜெய்ப்பூர்-பிகானேர் தேசிய நெடுஞ்சாலையில் ஃபதேபூர் அருகே நேற்று இரவு 11 மணியளவில் ஆம்னி பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு யாத்திரை சென்றுவிட்டு காது ஷியாம்ஜிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின் போது பேருந்தில் சுமார் 50 பயணித்த நிலையில் 28 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















