யுனெஸ்கோ அமைப்பின் மறையாத கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துளளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தீமை அழிந்து, நன்மை பிறப்பதை குறிக்கும் தீபாவளிப் பண்டிகை, வழிபாட்டைத் தாண்டி நமது மரபு மற்றும் எண்ணங்களின் வெளிப்பாடாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.
தீபாவளி, யுனெஸ்கோவின் மறையாத பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம், உலகின் கவனத்தை மேலும் ஈர்த்ததுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நமது பாரம்பரியங்களை போற்றுவதிலும், உலகின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் முனைப்புடன் செயலாற்றுகிறது.
இந்த தருணத்தில், அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக எல்.முருகன் கூறியுள்ளார்.
















