தூய்மைப் பணியாளர்கள் to செவிலியர்கள் : வியக்க வைக்கும் விடியா அரசின் பதவி உயர்வு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
Sep 12, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் to செவிலியர்கள் : வியக்க வைக்கும் விடியா அரசின் பதவி உயர்வு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 04:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் தலையில் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் வந்த பெண்மணி ஒருவருக்கு, செவிலியர்கள் இல்லாத காரணத்தால் அம்மருத்துவமனையின் தூய்மைப் பணியாளரே முதலுதவி செய்துள்ள காணொளி அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை, போதிய மருத்துவர்களோ முக்கிய மருந்துகளோ தரமான ஸ்கேன் வசதிகளோ இல்லை, மழை பெய்தால் கூரை ஒழுகுகிறது, நோயாளிகளின் படுக்கைகளில் தெருநாய்கள் படுத்துத் தூங்குகின்றன என தெரிவித்துள்ளார்.

டார்ச் வெளிச்சத்தில் மருத்துவம் பார்க்கப்படுகிறது, தூய்மைப் பணியாளர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்பதற்கு இவற்றை விட வேறு என்ன சான்றுகள் வேண்டும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐந்தறிவு உள்ள அணிலுக்கெல்லாம் பாவம் பார்த்து அதைக் காப்பாற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்களுக்கு ஆறறிவு கொண்ட அப்பாவிப் பொதுமக்கள் திமுக ஆட்சியில் படும் துன்பங்கள் தெரியவில்லையா? எனறும் வினவியுள்ளார்.

திமுக ஆட்சியில் அழிவின் விளிம்பில் இருக்கும் மருத்துவத்துறையின் அவலங்களை மூடி மறைத்துவிட்டு உலகம் போற்றும் மருத்துவக்கட்டமைப்பை கொண்டுள்ளது திராவிட மாடல் என வாய் கூசாமல் வெற்றுப் பெருமை பேசும் உடன்பிறப்புகளோ அவர்களின் தலைவர்களோ அடிபட்டால் அரசு மருத்துவமனையை நாடுவார்களா? என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjp nainar nagendran speechSankarapuram Government HospitalkallakurichiNainar Nagendrannainar nagendran bjpbjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

யுனெஸ்கோ அமைப்பின் மறையாத கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி – எல்.முருகன் வாழ்த்து!

Next Post

இந்தியாவின் பன்முகத்தன்மை – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies