புதியதாக கட்சி துவங்குபவர்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்ன என்றும், மத்திய அரசு எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை தெரிந்து பேச வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பாண்டிச்சேரிக்கு என்ன திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என தெரிந்து பேச வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத் தேர்தலில் நின்றால் டெபாசிட் இழக்க செய்வேன் என செங்கோட்டையன் கூறியது குறித்து கேள்விக்கு செங்கோட்டையனை விட நான் குறைந்த வயதாக இருந்தாலும் அவர் என்னை குருஜி என்று அழைப்பார் என தெரிவித்தார்.
புதிய கட்சியில் சேர்ந்து உள்ளார். அந்த கட்சி ஆட்சிக்கு வரும் என கூறியிருந்தார் அதைப்பற்றி எவ்வாறு வரும் என வினவி இருந்தேன் அதற்கு செங்கோட்டையன் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக தெரிவித்தார்.
ஒருவேளை அவர் திருநெல்வேலியில் வந்து நிற்பாரா என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நன்கு படித்தவர்கள் கூட எல்லை கல் எது– தீபம் ஏற்றும் கல் எது என தெரியாமல் பேசுகின்றனர் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்,
















