சென்னை பூந்தமல்லியில் கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
சென்னை பூந்தமல்லியில் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் தனியார் கல்வி குழுமம் சார்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதன் ஆரம்பகட்ட பணியாக, அங்குள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு கீழே உள்ள மணல் பொக்லைன் இயந்திரம் மூலம் எடுக்கப்படும் நிலையில், திடீரென கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பு பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, தனியார் கல்வி நிறுவனம் சார்பில் கட்டப்படும் கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களை பணிக்கு அமர்த்தவில்லை என்றும், இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினர்.
கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து மணலை தோண்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் கூறினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
















