கடற்படை உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும், பிரேசிலும் வரலாற்று சிறப்புமிக்க நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு தொடர்பான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரேசிலுக்கு மேற்கொண்டிருந்தார்.
அந்த பயணத்தின் போது ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்களின் பராமரிப்பு தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு முக்கிய முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியக் கடற்படை, பிரேசில் கடற்படை மற்றும் மசகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகிய மூன்று தரப்புகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவும் பிரேசிலும் கடற்படை ஒத்துழைப்பில் ஒரு பெரிய படி முன்னேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்திய மற்றும் பிரேசிலிய கடற்படைகள் இடையேயான இந்த ஒத்துழைப்பு, பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என்றும் நிபுணர்கள் திடமாக நம்புகின்றனர்.
















